Read more
85 வயதாகும் ஏவேக என்ற மூன்று எழுத்துப்பெயர் தமிழ் உலகு நன்கு அறிந்த பெயர் நெல்லை மாவட்டத்தில் குற்றாலத்திற்குக் கிழக்கே 19 கிலோமீட்டரில் தமிழூர் என்ற ஒன்றைத் தோற்றுவித்து, அங்கு வாழ்ந்து வருகிறார். பள்ளிக் அல்வி அம்பாசமுத்திரம் தீர்த்தபதி உயர்நிலைப் பள்ளியில் அமைந்தது. இடைநிலைக் கல்வி திருநெல்வேலி மதி.தா. இந்துக் கல்லூரியில் நடைபெற்றது. தமிழ்ச் சிறப்பு வகுப்பு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் (1950-53) அசைந்தது. முனைவர் பட்டம் கேரளப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் சுப்பிரமணியன் அவர்கள் நெறிகாட்டுதலிலும் மேற்பார்வையிலும் நடைபெற்றது.
தமிழ்த் துறைத் தலைவராகி, அங்கிருந்து உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் முதன்மை அலுவல் ஆட்சியராகவும் இயக்குநராகவும் அவர் கல்விப் பயணம் அமைந்தது. 1987இல் பணிநிறைவான பின்பு, தமிழரில் உலகத் தமிழ்க்கல்வி இயக்கம் என்ற அமைப்பின் மதிப்பது இயக்குநாாகத் தற்போது பணியாற்றி வருகிறார்.
தமிழில் இதுணை 165 நூல்களையும் ஆங்கிலத்தில் 9 நூல்களையும், மலையாளத்தில்
சிலப்பதிகாரம் - வஞ்சிக்காண்டத்தையும் பொழிபெயர்த்து வெளியிட்டுள்ளார்.
இவர் வழிகாட்டுதலில், கேரளம், மதுரை காமராசர், சென்னை, பெங்களூர் ஆகிய பல்கலைக்
அழகங்களின் வழி 44 பேர் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர்.
சிலப்பதிகாரம் பற்றி 34 நூல்களையும், தமிழ் இலக்கண நூல்களாக 9 நூல்களையும், தொல்காப்பியம் பற்றி 30 நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது தொல்காப்பியம் தெளிவுரை 12ஆவது பதிப்பாக 2013-இல் வெளிவந்துள்ளது. தொல்காப்பியத்தை மொழி பெயர்த்துள்ளார்.
வாழ்க்கை அடிப்படையான மனிதம், மனமும் உயிரும், உடல் உள்ளம் உயிர். மனம் போன்ற நூல்களையும் எழுதியுள்ளார். பதிப்பு நூல்களாக 100க்கு மேல் வெளிவந்துள்ளன. வழங்கப்பெற்ற விருதுகள்
செந்தமிழ்ச் செல் விருது. இராமநாதபுரம் மன்னர் பாஸ்கரசேதுபதி விருது, சாகித்திய அகாதெமி வழங்கிய பாா சம்மான் விருது, தமிழாகரர் விருது. நல்அறிஞர் விருது, சைவநன்மணி விருது. மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை விருது, ஔவைத்தமிழ் அருளாளர் விருது தமிழியக்கச் சமன் விருது, ராஜா அண்ணாமலைச் செட்டியார் அறக்கட்டளை விருது (ரூ. 1 இலட்சம் பரிசு), தொல்காப்பியச் செம்மல் விருது, சென்னை கம்பன் விருது. தமிழக அரசின் கி.ஆ.பெ விசுவநாதம் விருது ரூ. 1 இலட்சம் பரிசு, கலைஞர் விருது ரூ.1 இலட்சம் பரிசு தரும ஆதினம் செந்தமிழ்க் அலாநிதி விருது, சி.பா. ஆதித்தனார் மூத்ததமிழறிஞர் விருது ரூ. 3 லட்சம் 2013 முதலியன வழங்கப் பெற்றவர்.
6
ரூ.
0 Reviews